உயர் மட்ட குழவினர் கிளிநொச்சிக்கு செல்வதன் காரணமாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் சமாதான முனைப்புகளில் காணமுடியாது என இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சிக்கான தொடர்புகளை ஏற்படுத்தித்தருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட்டோர் தமிழிழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தி சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்த விஜயம் உதவும் என ஐரொப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளி;த்துள்ள இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சு உயர்மட்ட குழுவினர் கிளிநொச்சிக்கு செல்லும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் உயர்மட்டக்குழுவினர் கிளிநொச்சிக்கு செல்லும் போது அதனை தமிழிழ விடுதலைப்புலிகள் தமது சர்வதேச பிரசாரத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஐரொப்பிய ஒன்றியத்தின் சமாதானத்திற்கான காத்திரமான முனைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தமது ஆதரவை வழங்கும் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் உதவி நிறுவனங்கள் உட்பட்ட பல்வேறு பெயர்களில் ஐரொப்பிய நாடுகளில் இயங்கி வருவதை தடுக்கவேண்டும் என இலங்கை வெளியுறவு அமைச்சு கேட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் .இனப்பிரச்சினைத்தீர்;வுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சிக்குழு மாகாணங்களுக்கு இடையில் அதிகாரப்பரவாலக்கலை மேற்கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் நாட்டின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முனைப்புடன் செயற்படுகிறது. இலங்கை தமது அரசியலமைப்பின்படி பொது மக்களின் உண்மை தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அதன் நீதிநிர்வாகங்களை அமைத்துள்ளது. இந்தநிலையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணிக்கும் சுயாதீன சர்வதேச ஆணைக்குழு இலங்கையில் தமது பணிகளை நிறுத்திக்கொண்டமைக்காக வழங்கிய காரணங்களை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.