அண்மை நாட்களாக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே தனது சீன சார்பு நிலையை அறிவித்து வருகின்றது உலக இயங்கியல் விதிகளின் கீழ் மேற்குலகம் என்று சொல்லப்படுகின்ற முதலாளித்துவ பொருளாதார சார்பு நிலை நாடுகள் எதிர் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிரான போக்குடைய நாடுகள் என்ற இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன.
முதலாளித்து சார்பு நிலை நாடுகள் அமெரிக்காவின் கீழ் அதன் கொள்கைகளுக்கு ஆமாம் சாமி போடும் வகையில் அணிவகுத்திருக்க எதிர் முகாம் சீனாவை தலைமையாக கொண்டதாக எழுச்சி பெற்று வருகின்றது.
ஆசியாக் கண்டத்தின் பலம் மிக்க நாடாக விளங்கும் சீனா அனைத்து துறைகளிலும் அமெரிக்க சார்பு கூட்டணிக்கு சவால் விடுத்து வருகின்றது சீனாவின் எதிர்பினை மீறி அமெரிக்கா ஆசியாக் கண்டத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்த பல்வேறு பிரயாச் சித்தங்களில் ஈடுபட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
வியட்நாம் ஆப்கானிஸ்தான் ஈராக் என அமெரிக்கா தனது படைகளை ஆசியாவில் ஆங்காங்கே நிலைகொள்ள வைத்துள்ள போதிலும் தெற்காசியாவில் அதன் நிலை கொள்ளலுக்கான வாய்ப்புகள் இன்னும் முழுமை பெறவில்லை.
தெற்காசிய நாடுகளில் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அமெரிக்க கவனம் இலங்கையின் மீதே அதிகம் காரணம் யாரும் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். இலங்கையில் இருந்து தெற்காசியாவை மிக இலகுவாக அமெரிக்கா புலனாயலாம்.
ஏற்கனவே புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அமெரிகாகவின் குரல் வானொலி நிலையத்தின் பிரதான செயல்பாடுகள் குறித்து இந்தியா உட்பட ஆசிய நாடுகள் கவலை அடைந்துள்ள நிலையில் இலங்கையில் நேரடியாக இராணுவ தளங்களை அமைப்பதும் போhக் கப்பல்களை இலங்கை துறை முகங்களில் நிறுத்துவதும் ஆசிய நாடுகளுக்கு தலையியை ஏற்படுத்தும் அண்மைக்கால் முதலாளித்துவ அல்லது அமெரிக்கா சார்பு நிலையிலான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் இலங்கையில் தளம் அமைக்கும் முயற்ச்சிகளுக்கு தடை போடாது அல்லது குறைந்த பட்ச எதிர்பாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அப்படியானால் அமெரிக்காவின் இலங்கையை நோக்கிய நகர்வு ஆசிய நாடுகள் மீதான சீனாவின் ஆதிக்க கனவை சிதறடித்து விடும் என்பது தான் தற்போதைய பிரச்சினை.
அமெரிக்கா எற்றல்ல அமெரிக்க சார்புடைய இந்திய அல்லது ஜப்பான் போன்ற நாடுகளும் ஆசிய கண்டத்தில் ஆதிக்கம் பெறுவதை சீனா விரும்பவில்லை.
இப்போது இருக்கக் கூடிய அரசியல் தட்ப வெப்ப சூழ்நிலைகளின் படி கொதி நிலை கூடிய நாடாக இலங்கையே ஆசியாவில் காணப்படுகின்றது எனவே தான் இலங்கையை மையம் கொண்டு கிழக்கு மேற்கு புயல்கள் வீசத் தொடங்கியுள்ளன.
இந்த புயல்களில் எந்த புயல் வீரியம் மிக்கதோ அந்த புயலே இலங்கையை தாக்கும் அல்லது தாங்கும் அண்மைக்கால ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் போக்குகள் சீனாவின் ஆதரவு மட்டுமே போதும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன அண்மையில் வெளிப்படையாகவே மேற்குலக நாடுகள் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மிகக் கவனமாவ ஆராய்பட வேண்டியவை.
இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கும் மேற்குலக நாடுகளை ஒரம் கட்டிவிட்டு படைத்துறை உதவிகள் முதல் பாதைகள் அமைப்பது வரை சீனா தனது ஆதரவுக் கரத்தால் குட்டித் தீவை கட்டுடிப் போட முயல்வது தெளிவாக தெரியும் மேற்கு நாடுகள் தாம் வழங்கும் உதவிகளுக்கு மேலாக தாங்கள் எப்படி அரசியல் நடத்த வேண்டும் என பாடம் நடத்துவதாகவும் இது வெறுக்கத்தக்க செயல் என்றும் பாலித கோகன்ன குற்றம் சாட்டியுள்ளார்.
அவருடைய குற்றச்சாட்டு வெளியாகி ஈரம் காயும் முன்னர் அமெரிக்கா உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் அனைத்து விதமான மனத உரிமை மீறல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கமே பொறுப்பு என்று அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டு வெந்த புண்ணில் வேல் பாச்சியுள்ளது.
இந்த அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்தை ஒன்றும் செய்யாது என்பது ஒரு புறமிருக்க அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை அனைத்துலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு வலுவான சாட்சியாக மாறிவிட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் துணை ஆயுதக் குழுக்களுடன் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல்கள் ஆட்கடத்தல்கள் அரசியல் நோக்கம் கொண்ட படுகொலைகள் என அனைத்தையும் அமெரிக்கா ஆவணப்படுத்தியுள்ளது.
அரச ஆதரவு துணை ஆயுதக் குழுக்கள் முதல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குழுக்கள் அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குற்றவாளிகளாக சித்தரித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையிடல்களின் அடிப்படையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த அறிக்கையின் இயக்குனர் அமெரிக்காவின் இரும்புப் பெண்மணி என தற்போது வர்ணிக்கப்படும் கொண்டலிசா ரைஸ் அம்மையார் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் இலங்கை அரசாங்கம் தனது ஆதர்சமாக கருதும் சீனா குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தான் ஓலிம்பிக் போட்டிகளை நடத்த தயாராகி வரும் சீனாவில் இடம்பெற்று வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களே அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் பிரதான பகுதி.
சீனாவையும் இலங்கையையும் மட்டுமன்றி ஏனைய நாடுகளையும் கூட தனது அறிக்கiயில் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள போதும் ஆய்வாளர்கள் இந்த இரு நாடுகள் மீதான அமெரிக்க கோபத்தின் பின்னணி குறித்தே அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்.
இந்த அறிக்கை வெளியானதால் ஆடிப்போக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிவிவகார அமைச்சர் மூலமாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரை சந்தித்து இந்த அறிக்கை தொடர்பில் விளக்கம் கோரியது.
எனினும் தமது அறிக்கையில் எந்த தவறும் இல்லை என்று அமெரிக்க பாணியில் தெரிவித்த ரோபேர் ஓ பிளேக் தமது நிலைப்பாடு மாற வேண்டுமானால் ஸ்ரீவலங்கா அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நிச்சயமாக ரோபேர்ட் ஓ பிளேக் குறிப்பிட்ட மாற்றம் ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்பதாக நீங்கள் கருதினால் அது தவறு அமெரிக்க தூதுவர் கூறிய நிலைப்பாட்டு மாற்றம் என்பது சீன சார்பு நிலையை கைவிடுதல் என்பதாகவே பொருள் கொள்ளப்பட வேண்டும் இலங்கையில் இந்திய தலையீடு குறித்தும் சர்சைகள் எழுந்துள்ளன.
ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்குவதை வரவேற்கும் அரசின் பங்களிகளான ஜே.வி.பியினர் இலங்கையில் அரசியல் ரீதியாக தலையீடுகளை இந்தியா மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளது.
தமிழ் மக்கள் விரும்பும் எந்த ஒரு தீர்வையும் இந்தியா பெற்று தராது என்பது வெளிப்படையாக ஜே.வி.பியிற்கு தெரிந்திருந்தும் கூட இந்திய தலையீட்டை அது எதிர்பதற்கு காரணம் அது சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பு தான்.
சீனாவின் குரலாகவே ஜே.வி.பி இப்போது இலங்கை அரசியலில் ஒலித்து வருகின்றது.இதனால் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளமை வேறு விடயம் இலங்கைக்கு அதிகளவான உதவிகளை வழங்கி வந்த ஜப்hனi ஓரம் கட்டி விட்டு சீனா முதலிட்டத்தை பிடித்துள்ளது இலங்கையில் பெருந் தெருக்கள் அபிவிருத்தி மனிச்hர உற்பத்தி திட்டங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட வரும் துறைமுக அபிவிருத்தி என சீனாவின் உதவிக் கரங்கள் இலங்கையின் அனைத்து துறைகளையும் அரவணைத்து நிற்கின்றது.
அபிவிருத்திக்கான உதவிகளை சீனா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதால் ஆயுத தளபாட அழிவுகள் குறித்தோ யுத்தத்தின் செலவுகள் குறித்தோ ஸ்ரீலங்கா அரசாங்கம் கலைப்படாது அது மிக் 29 ரக தாக்குதல் வானூர்திகளையும் இன்னும் இன்னும் பெரிய ஆயுதங்களையும் வாங்கிக் குவிக்கும்.
வெற்றி பெற முடியாதென தெரிந்தும் பல முனைகளில் தாக்குதல்களை ஆரம்பிக்கும் தென்னிலங்கையில் போரில் தாங்கள் வெற்றி பெறுவதாகவும் விடுதலைப்புலிகள் தோற்று வரவதாகவும் கதைகள் கூறி சிங்கள மக்களை நம்பவைக்கும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் அல்லது சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்டுகின்றோம் என்பதை புரியும் வரைக்கும் ஸ்ரீலங்காவின் போர்க் குரல் ஒலிக்கும் ஆனால் வன்னியில் மட்டுமன்றி மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரிலேயே கள முனைகளை திறந்து வைத்துள்ள விடுதலைப் புலிகளின் மௌனம் கலையும் வரை தான் இந்த வெற்றுக் கூச்சல் எல்லாம் எடுபடும்.
சிங்களம் இதுவரை சந்தித்திராத அழிவினை தேடிக் கொண்டிருக்கின்றது ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை மறுத்த தமிழர் தாயகத்தை கூறு போட்டு மகிந்த ராஜபக்ச சகோதரர்கள் ஆடும் நாடகத்தின் அடுத்த கட்டக் காட்சிகள் சிங்களத்திற்கு கசப்பானதாக தான் இருக்கும்.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சீனா போடும் பாதைகள் அதன் நீண்டகால கனவுகளை நோக்காக கொண்டவை. இலங்கையில் அமைக்கப்டும் துறைமுகம் சீனாவின் நீண்டகால கனவின் ஒரு முக்கிய அம்சம்.
ஹம்பாந்தோட்டையில் சீனா அமைத்து வரும் துறைமுகம் சீனாவிற்கு இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்தை கைப்பற்ற மகிந்த ராஜபக்ச அமைத்துக் கொடுத்துள்ள மார்க்கம் இந்து சமுத்தரத்தில் பரந்து கிடக்கும் வளங்களை முற்றாக ஆக்கிரமித்து தனது அபரிமிதமான மனித வளத்தை பயன்படுத்தி முடிவுப் பொருட்களை உற்பத்தி செய்வதும் அதன் மூலம் உலக வாத்தகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றம் பெறுவதும் தான் சீனாவின் ஒரே நோக்கம் என்கின்றார்.
சிங்கப்பூர் நான்ஜங் பல்கலைக்கழக அனைத்துலக விவகாரங்கள் தொடர்பான பேராசிரியர் ராஜா மோகன். சீனாவின் இந்த திடத்தை தெளிவாக புரிந்து கொண்டுள்ள அமெரிக்கா இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தினாலும் மறைமுகமாக தனது நடவடிக்கைகள் மூலம் ஸ்ரீலங்கா படைகளுக்கு உதவுவதை நிறுத்தவில்லை .
குறிப்பாக இந்து சமுத்திரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை கண்காணிப்பதிலும் அவை தொடர்பில் தகவல்களை ஸ்ரீலங்கா கடற்படைக்கு வழங்குவதையும் அமெரிக்கா தொடர்கின்றது ஏன்றேனும் ஒரு நாள் தனது உதவிக்கான பலனை அமெரிக்கா ஸ்ரீலங்காவிடம் இருந்து எதிர்பாhக்கும் அது அநேகமாக திருகோணமலை துறை முகத்தில் நிரந்தரமாக தனது கண்காணிப்பு கப்பல் ஒன்று நிறுத்துவதற்கான அனுமதியாக தான் இருக்கும்.
சீனாவா… அமெரிக்காவா… ஆப்பிழுத்த குரங்காக மகிந்த ராஜபக்சவின் நிலை மாறும் நாள் விரைவில்..