புத்தளம் வண்ணாத்திவில்லு காவல்துறையினால் அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டில் பணிபுரிந்த பின்னர் நாடு திரும்பிய பிச்சைதம்பி மரிக்கார் பாயிஸ் என்பவர் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிததுள்ளது..
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இரவு இவரது வீட்டிற்கு வந்த சிலர் தாம் காவல்துறையினர் எனக்கூறி பாயிஸை இலக்கதகடு அற்ற வெள்ளை வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
தாம் வைத்திருந்த சட்டபூர்வமான துப்பாக்கி தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்காகவே இவர் அழைத்துசெல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து அடுத்தநாள் காலை வண்ணாத்திவில்லு காவல்துறைக்கு சென்ற பாயிஸின் சகோதரர் முதல் நாள் தமது சகோதரனை அழைத்துச்செல்ல வந்த வெள்ளை நிற வாகனத்தை அங்கு கண்டுள்ளார்.இதனையடுத்து தனது சகோதரரை பற்றி அவர் காவல்துறையினரிடம் விசாரித்தபோது அவர் தமிழிழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற வகையில் கொழும்புக்கு விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தமது சகோதரர் வைத்திருந்த சட்டப10ர்வ துப்பாக்கியை காவல்துறையினரிடம் கையளித்த குடும்பத்தினர்கொழும்பில் உள்ள காவல்துறையினரிடம் பாயிஸை பற்றி விசாரித்தபோது அவர்கள் இதனைப்;பற்றி தமக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் 1989 ஆண்டுக்காலப்பகுதியில் இருந்து 2008 ஆம்; ஆண்டுக்காலப்பகுதிவரை சுமார் 30 ஆயிரம்பேர் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளமையை ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.