உந்துருளியில் பயணித்த இருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தியில் அமைந்துள்ள படையினரின் சோதனை சாவடியின் மீது கைக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முற்பகல் 9.15 அளவில் இடம்பெற்றுள்ளது.எனினும் இந்த கைக்குண்டு வெடிக்காமையால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து படையினர் பிரதேசத்தில் பாரிய தேடுதல்களி;ல் ஈடுபட்டனர் இதன் காரணமாக அந்த பகுதியின் வீதி வாகனப்போக்குவரத்துக்கள் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக தடைப்பட்டிருந்தன.
இதேவேளை இவ்வாறான தாக்குதல் ஒன்று கடந்த வாரம் கைதடியிலும் இடம்பெற்றது.