இலங்கையின் அரசியலில் ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்தபிக்குமார் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்ற கேள்விக்கு கொழும்பு காடியன் செய்திதாள் காரணங்களை முன்வைத்துள்ளது.
இலங்கையின் அரசியலி;;ல் நாடாளுமன்ற பிரவேசம் மூலம் தோன்றிய ஜாதிக ஹெல உறுமயவினர்நாடாளுமன்றத்திலும் இலங்கை அரசியலிலும் தர்மராஜக்கொள்கையை நிலைநாட்டப்போவதாக தெரிவித்திருந்தனர். எனினும் அவர்கள் நாடாளுமன்ற பிரவேசத்தின் பின்னர் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்ற கோசத்தை எழுப்பினர். அதன்படி அரசாங்கமும் யுத்தத்தை முன்னெடுத்தது. எனினும் இதற்கு பின்னர் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் அவர்கள் எதுவும் பேசாமலிருப்பது குறித்து பொதுமக்கள் மத்தியி;ல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள்கொலைகள் கடத்தல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் போன்றவை தொடர்பில் அவர்கள் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காதுள்ளனர். இதற்கான காரணம் அவர்களர் இந்த விடயங்களை நியாயப்படு;த்தமுடியாமையேயாகும்.அண்மையில் இலங்கையில் முக்கியமாக பேசப்பட்ட விடயமான 13 வது திருத்தச்சட்ட அமுல் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்களான அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மம்பில ஆகியோர் எவ்வித பாரிய எதிர்ப்புகளையும் வெளியிடவில்லை.
இதனைடுத்து அமைச்சர் மேவின் சில்வா ரூபவாஹினி நிலையத்துக்குள் புகுந்து நடத்திய வன்முறையை ஜாதிக ஹெல உறுமய கண்டித்த போது ஜனாதிபதி ஜாதிக ஹெல உறுமயவை எச்சித்திருந்தார். இந்தநிலையில் தர்மராஜக்கொள்கையை நிலைநாட்டமுடியாத ஜாதிக ஹெல உறுமய பேசுவதை விட “கேட்கவில்லை பார்க்கவில்லைபேசவில்லை என்ற அடிப்படையில் அமைதியாக இருக்கும் கொள்கையை கடைபிடிப்பதாக கொழும்பு காடியன் குறிப்பிட்டுள்ளது.