இலங்கை அரசாங்கம் வடக்குமோதல் களத்தில் கஸ்டங்களை எதிர்நோக்குகிறது என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட்ட அரசாங்கத்தின் பேச்சாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களி;ல் இருந்து தெரியவருவதாக தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழிழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதாக கூறி அரசாங்கம் விதித்திருந்த காலக்கெடு நீடிக்கப்பட்டு வருவது இதனையே குறித்து நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையின மக்கள் போர் தொடர்பாகவும் பொருளாதார நலவுத்தொடர்பாகவும் காட்டி வரும் எதிர்ப்பற்ற கொள்கையே இந்த நிலைமைக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற நிலைப்பாட்டுக்குள் அரசாங்கம் மக்கள் வைத்துள்மையால் அவர்கள்அரசாங்கம் தமிழிழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்கும் என நம்பிக்கையை கொண்டுள்ளார்கள் இந்தநிலையில் இலங்கையின் சுற்றுலா விருந்தகங்களுக்கு சுற்றுலா பயணிகளின்; வருகையின்மையால் அந்த பொருளாதாரம் நலிவடைந்துள்ளது எனினும் அந்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமிழிழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக தாம் தியாகங்களை செய்வதாக கூறுகின்றனர் என ஜெஹான் பெரேரா தெரிவிக்கிறார்.
தேசியவாதிகளை பொறுத்தவரையி;ல் அவர்கள் போரின் விலைக்குறித்து அக்கறை செலுத்தவில்லை. எனினும் இலங்கைக்கு உதவி வழங்கி வந்த நாடுகள் மனித உரிமை மீறல்கள் குறித்து தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. இலங்கையின்; எதிர்கட்சிகளை பொறுத்தவரையில் அவை தமக்குள் நாட்டின் நிலைமை தொடர்பாக எதிர்ப்பை காட்டுக்pன்ற போதும்.தமது தேர்தல் தொகுதிகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளன. இந்தநிலையில் கொழும்பிலும் வடக்கிலும் கிழக்கிலும் கடத்தல்கள் கொலைகள் மற்றும் தடுத்துவைத்தல் போன்றவற்றிற்கு உட்படும் தமிழ் மக்கள் பேசமுடியாத அமைதி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே கிழக்கின் உள்ளுராட்சி தேர்தலும் முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இனப்பிரச்சினைத்தீhவுக்கு பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் மாத்திரமல்லாமல் இனப்பிரிவுகளுக்கு இடையிலும் இணக்கம் ஏற்படவேண்டியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி தேசியவாதத்திற்கும் யுத்தத்திற்கும் எதிரான கொள்கையை கொண்டுள்ளதுஇந்த கொள்கையானதுஅரசாங்கத்தின் கொள்கையுடன் முரண்பட்டு நிற்கிறது. இவ்வாறான சூழலில் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அசாதாரணமான முன்னெடுப்பு ஒன்று அவசியமாவதாக ஜெஹான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்