மதவாச்சி பொலிஸ் காவலரனூடாக சென்றுக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான வானொன்றிலிருந்து ஜொலிக்னைட் வெடிப்பொருட்களை
பொலிஸார் நேற்று மீட்டனர். வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி.பி.பத்திரனவுக்கு கிடைத்த தகவலையடுத்து மதவாச்சி பொலிஸ் காவலரனில் வைத்து இந்த வான் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது இந்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வானில் பயணம் செய்துக்கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.