முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவின் சாவையடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சரண குணவர்த்தனவை நியமிக்கத் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் தேசிய லொத்தர் சபையின் தலைவர் உபாலி லியனகே சிறீலங்கா சனாதிபதியால் உடனடியாகப் பதிவி நீக்கப்பட்டு, அவர் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமனம் பெற்றுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவராக லங்கா புத்திர வங்கியின் தலைவர் வாஸ் குணவர்த்தன சனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.