பிள்ளையான் அணியின் ஆயுதங்களை களையவேண்டும் என ஜே வி பி கோரியுள்ளது. இந்தக்கோரிக்கையை ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க விடுத்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது பிள்ளையான் அணி தமது ஆயுதங்களை பயன்படுத்தி தேர்தல் மோசடிகளில் ஈடுபடலாம் என எதிர்வின் அடிப்படையிலேயே அந்த அமைப்பின் ஆயுதங்களை களையவேண்டும் எனக்கோருவதாக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட ஒன்றில் உரையாற்றிய அவர் தமிழிழ விடுதலைப்புலிகளினால் பிள்ளையான் குழுவிற்கு அச்சுறுத்தல் உள்ளதை ஏற்றுக்கொள்ளலாம் எனினும் அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கப்படைகளால் வழங்கமுடியும் என குறிப்பிட்டார்.அண்மையில் தம்மை சந்தித்த ஐரொப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளும் பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை அரசாங்கம் ஏன் களையவில்லை என்ற கேள்வியை எழுப்பியதாக குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் மூலம் இந்தியாபொம்மை நிர்வாகம் ஒன்றை உருவாக்க முனைவதாக குற்றம் சுமத்திய சோமவன்ச இந்தியா ஏற்கனவே கிழக்கின் புல்மோட்டை வரை நிலங்களை கையேற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தம்மிடம் திருகோணமலை சம்பூரில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளப்போவதாகவும் அதனை விற்பனை செய்யப்போவதாகவும் தெரிவித்தாக சோமவன்ச எனில் இலங்கை அந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இந்திய மக்களுக்கு தாம் எதிரானவர்கள் அல்லர் என குறிப்பிட்ட சோமவன்ச. அமரசிங்கஇந்திய அரசாங்கத்தின் ஆட்சி எல்லையை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கே தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இவ்வாறான தேசிய நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே தாம் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்