கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை அரசாங்க செய்திதாளான தினமின தெரிவித்துள்ளது.
அண்மையில் க்ளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே. சிவநேசனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது பிரபாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்களின் தமிழர்களை வாக்குகளை கோருவது தமிழீழத்தைப் பெற்றுக் கொள்ளத் தடையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தல்களில் கலந்து கொள்ளாததனால் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிடாது என பிரபாகரன் எதிர்பார்ப்பதாக தினமின குறிப்பிட்டுள்ளது.