கச்சத்தீவில் இடம்பெறும் சென் அந்தனீஸ் தேவாலய வருடாந்த உற்சவத்திற்கு செல்லும் வாய்ப்பு யாழ்ப்பாணத்து மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இரண்டாவது வருடமாக இந்த தடவையும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்சவம் ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் இடம்பெறும். இந்தநிலையில் தற்சமயம் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலைக்காரணமாக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இந்த உற்சவத்திற்கு செல்வதை தடைசெய்துள்ளதாக யுசிஏஎன் செய்திசேவை தெரிவித்துள்ளது.
இந்த உற்சவத்திற்கு செல்ல முதலில் ஏற்பாடுகளை செய்தபோதும் பின்னர் படையினர் அங்கு அனுமதிக்காமையால் யோசனையை கைவிட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள வணக்கத்துக்குரிய தந்தை ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு சென் அந்தனீஸ் தேவாலயம் சுமார் 70 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு 1983 ஆம் ஆண்டு முதல் 2002 வரை இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானவுடன் இந்த தடை நீக்கப்பட்டது எனினும் அந்த தடை கடந்த வருடம் முதல் மீண்டும் அமுல்செய்யப்பட்டுள்ளது