இலங்கை தமிழ் அகதிகளுக்கான நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுகிறது. முகாம்களில் உள்ள அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன என தமிழக அரசின் வரவு செலவுத் திட்ட பரிந்துரையில் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறுகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசுதான் கையாள வேண்டும், பிறந்த மண்ணில் வாழ வழியின்றி பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
இதனை நிறைவேற்றக் கூடிய பொறுப்பும் அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.