கோதுமை மாவின் விலை மேலும் 10 ரூபாவினால் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் "திரிங்கு' கொட்டையின் விலை அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டில் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலையை கிலோவுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பிரிமா நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
பிரிமா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியை கோரவேண்டிய அவசியமில்லை என்று அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிலோவிற்கு 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.