கிளிநொச்சியிலுள்ள சத்திரசிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பல்வேற சிகிச்சைப் பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடத்
தொகுதி நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
றோமியல் தலைமையில் நடைபெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பொதுச்சுடரினை மருத்துவப் பிரிவுப்பொறுப்பாளர் மாறன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை வைத்தியசாலையின் பணிப்பாளர் பாவேந்தன் ஏற்றிவைக்க, தொடர்ந்து மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர்ஏற்றப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன.
தொடர்ந்து புதிய கட்டடத்தின் பிரதான நுழைவாயினை மூத்த வைத்திய கலாநிதி கெங்காதரன் ஐயா அவர்கள் திறந்து வைக்க, மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட ஆய்வுகூடத்தினை வைத்திய கலாநிதி ஓவியன் திறந்துவைத்தார்.
தொடர்ந்து பற்சிகிச்சைப் பரிவை வைத்திய கலாநிதி எழுமதி கரிகாலனும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பரிவை பொறுப்பு மருத்துவர் வைத்திய கலாநிதி மலரவனும் திறந்துவைத்தார்கள்.
அத்துடன் அலுவலகம், மருத்துர் ஓய்வறை, பணியாளர் ஓய்வறை, கணக்காய்வுப் பகுதி என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. அடுத்து தாதிப்பயிற்சி நெறியில் சித்தியடைந்த தாதியர்களுக்கு சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.