வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் மீனவர்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். வடமராட்சி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையை சிறிலங்காக்
கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய சாக்கோட்டைக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கி வேட்டுக்களை கடற்படையினர் தீர்த்தனர்.
இதனால், மீனவர்கள் அவசரமாகக் கரைதிரும்பினர். குறிப்பிட்ட மீனவர்கள் கரையில் இருந்த படையினரிடம் அனுமதிபெற்றே மீன்பிடிக்கச்சென்றனர். இவ்வாறு சென்றவர்களையே கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர்.