கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்புமனுக்கல் தாக்களுக்கான அனைத்து ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணசபை தேர்தல் 20 வருடங்களின் பின்னர் எதிர்வரும் மே மாதம் 10 திகதி இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 திகதி நண்பகல் முற்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
கிழக்குமாகாணசபைக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் கடந்த 19ஆம் திகதி தேர்தல் செயலகத்திலும் மாவட்ட தேர்தல் செயலகங்களிலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கிழக்குமாகாணசபைக்கான இந்த தேர்தலிலட 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.