அரசாங்கம் கிழக்கில் இருந்து 10 அதிரடிப்படை முகாம்களை அகற்றியமையானது பிள்ளையான் குழுவிற்கு கிழக்கை கையளிக்கும் முயற்சியின் முதலாவது கட்டம் என வடக்குகிழக்கு சிங்கள சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் கிழக்கில் இருந்து மேலும் 40 இராணுவ முகாம்களை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் செயலர் சுனில் அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் படையினரதும் காவல்துறையினரதும் தியாகங்களை காட்டிக்கொடுத்துள்ளதாக வடக்குகிழக்கு சிங்கள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமது அமைப்பு விரைவில் அரசியல் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இது குறி;த்து மௌனமாக உள்ளமை கவலையை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்