ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய மத்தியஅரசும் தமிழ்நாட்டு மாநில அரசும் சேர்ந்து செயற்படவேணடும் என வேண்டி இன்று சென்னையில் பேரணி நடைபெறுகின்றது.
சிறிலங்காப் படைகள் தமிழ்மக்களது நிலங்களை ஆக்கிரமிக்கும்போரை
தீவிரப்படுத்தியுள்ளதோடு மனிதஉரிமை மீறல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது. சிறிலங்கா அரசு போரை மேலும் தீவிரப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயுதஉதவிகளும் வழங்கிவருகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழின உணர்வாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் தமிழர்தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பேரணி நடைபெறுகின்றது.
ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிறிலங்கா அரசிற்கு இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளும் உதவி செய்யக்கூடாது எனவும் மாறாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் சேர்ந்து செயற்படவேண்டும் எனவும் இன்றைய பேரணியில் வலியுறுத்தவுள்ளனர்