22-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
தேசிய ரீதியில் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு கடந்த இரண்டு மாதக்காலப்பகுதியில் மாத்திரம் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமாக 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் தெளிவாக்கல் நிகழ்வுகளை நடத்திவருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்;துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஜெகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார். இதேவேளை சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான காவல்துறையின் தகவல்படிääகடந்த வருடத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் சம்பந்தமாக சுமார் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் இரண்டாயிரத்து இருநூற்று நான்கு முறைப்பாடுகள் பாரதூரமான சம்பவங்கள் சம்பந்தமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 406 பிழையான வழிநடத்தல் என்ற அடிப்டையிலும்ää 124 கடத்தல் சம்பவங்களும் இதில் அடங்குகின்றன. அத்துடன் 662 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் 144 தாக்குதல் சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
|