22-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கிழக்கில் இருந்து விசேட அதிரடிப்படையினரை விலக்கிக்கொண்;ட செயற்பாடானது கிழக்கில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிழக்கில் இயங்கும் சிறிய ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களையாமல் விசேட அதிரடிப்படையினரை அங்கிருந்து விலக்கிக்கொண்டமை எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது கட்சி சித்தார்தன் தலைமையிலான புளொட் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
|