வடக்கு போரில் வெல்ல முடியாது என ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்
[ சனிக்கிழமை, 22 மார்ச் 2008, 06:21.04 AM GMT +05:30 ]
அரசாங்கம் வடக்கு யுத்தத்தில் வெல்லமுடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை அவர் ஐக்கிய தேசிய கட்சிய்pன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக லங்கா இ நியூஸ் தெரிவித்துள்ளது.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்தநிலையில் அவருடன் இரண்டு தடவைகளாக தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி அவரை அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு கோரியுள்ளார். அத்துடன் தமிழிழ விடுதலைப்புலிகள் நம்பமுடியாத அளவிற்கு ஆயுங்களை வைத்துள்ளார்கள் எனத்தெரிவித்த ஜனாதிபதி தம்முடன் இணைந்து இது தொடர்பான வீடியோவை பார்க்கமுடியும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தன்னை அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு விடுத்த அழைப்புக்கு பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் நாடர்ளுமன்ற உறுப்பினர் தனியாக தான் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. இதற்கு கரு ஜெயசூரிய 17 உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமையும் உதாரணமாகும். எனவே அரசாங்கம் ஐக்கிய தேசியகட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியகட்சியின் தலைவருக்கு அரசாங்கத்தின் உயர் பதவி ஒன்றை வழங்கினால் அதன் மூலம் நாட்டில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடர்ளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் ஆலோசனை தெரிவித்துள்ளார் எனினும் இதற்கு ஜனாதிபதி எந்த ஒரு பதிலையும் வழங்கவில்லை என லங்கா இ நியூஸ் தெரிவித்துள்ளது.