முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தளத்தை இலங்கை விமானப்படையின் போர் விமானங்கள் தாக்கி உள்ளன. இத்தாக்குதல் இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முல்லைத்தீவின் நாயாறு கடற்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கைக் கடற்படையின் அதிவேக டோறா தாக்குதல் படகு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளானதை அடுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்று விமானப் படைத்தரப்பை ஆதாரம் காட்டி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வன்னித் தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.