யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுன்னாகத்தைச் சேர்ந்த தர்மராஜா ரகுபதி (வயது 38) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:35 மணிக்கு அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உந்துருளியில் வந்த இருவர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த உந்துருளியும் வீழ்ந்து கிடந்தது.
சூட்டுச் சம்பவ இடத்தை மல்லாகம் மாவட்ட நீதிபதி இளங்கோவன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.