மன்னாரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிமுதல் மன்னார், அடம்பனில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள பறயண்குளம் பகுதியிலேயே உக்கிர மோதல் இம்பெற்றுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுவரும் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்பு அணியினர் வழிமறித்து கடும் தாக்குதல் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது படையினருக்கு கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தாக்குதல் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் இன்று சனிக்கிழமை படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்கள் காரணமாக இதுவரை 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 படையினர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை தொடக்கம் மன்னார் தள்ளாடி முகாமில் இருந்து படை உலங்குவானூர்திகள் வந்துவந்து சென்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.