விடுதலைப் புலிகளுடனான மோதலுக்கு இந்தியா தனது முழு ஆதர வையும் வழங்கி வருவதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இந்தியாவில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மதுரைக்கு சென்று அங்குள்ள புனித மரியாள் தேவாலயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு பிரார்த் தனையில் பங்குபற்றினார்.
பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தேவாலயத்திலிருந்து வெளியே றிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியிருப்பதா வது :
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள் தான். ஆனால் பழி இராணுவத்தின் மீது விழுகிறது .
தமிழக மீனவர் களை இலங்கை இராணுவம் தாக்கி வருவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். தமிழக கடலோர எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால் பழியை இலங்கை இரா ணுவம் மீது போட்டு விடுகின்றனர்.
இலங்கையில் அமைதி திரும்புவதை புலிகள் விரும்பவில்லை. பிரிவினையை ஏற்படுத்துவதுதான் அவர்களது நோக்கம். அவர்கள் வெடி குண்டு கலாசாரத்தையே விரும்புகின்றனர்.
இந்த பிரச்சினையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதோடு உள்ளோம். இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் 95 சதவீதம் மக்கள் விரும்புகின்றனர்.
கிழக்கு மாகாணத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதன் மூலம் அவர்கள் சுய ஆட்சி பெற்ற மாநிலமாக செயல்பட உள்ளனர். விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்றார்.