கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை
அதன் அமைப்பாளர்கள் கோரியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்பாளர்களில் 90 சதவீதமானோர் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஐ.தே.கட்சியுடனோ, அல்லது அரசாங்கக் கட்சியுடனோ வேறு எந்தகட்சியுடனோ கூட்டுச்சேராமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேர்தல் முடிவடைந்தபின்னர் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் இணைந்து செயற்படலாம் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சி எதனுடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதா என்பது குறித்து எதிர்வரும் 26 ஆம் திகதி இறுதி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.