வட போர்முனையான யாழ். முகமாலை- கிளாலி- நாகர்கோவில் முன்னரங்கப் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இம் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தி படையினரை விரட்டியடித்தனர்.
இதில் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விடுதலைப் புலிகள் தேடுதல் நடத்தியபோது
ரி-56 - 2 ரக துப்பாக்கி - 01
ரவைக்கூடு - 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் நாகர்கோவில் பகுதியில் நேற்று நடைபெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.