23-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலை குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு அராயவுள்ளது ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருக்கும் இந்த குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்தைகளை நடத்தவுள்ளதுடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிடவுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் விஜயத்தை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் தனது வருடாந்ட மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையை வெளியிடவுள்ளது ஏற்கனவே அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது இதனைதொடர்ந்து பிரித்தானிய அரசாங்கமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் வகையில் அறிக்கையினை வெளியிட்டால் அனைத்தலக ரீதியில் மிகப்பெரும் நெருக்கடியை ஸ்ரீலங்கா அரசாங்கம் சந்திக்க வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து தற்போது பிரித்தானியாவிற்;கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் பிரித்தானிய பாராளுமன்ற குழுவினரை தனித்தனியாக சந்தித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள மனித உரிமைகள் தொடர்பா அறிக்கையில் வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது
|