2006 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியலமைப்பு விவகார குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ராமசாமி மலேசிய பெனாங் பிராந்தியத்தில் பிரதி முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பெனாங் பிராந்தியம் மலேசியாவின் பொருளாதார நடுமையம் என அழைக்கப்படுகிறது. மலேசியாவில் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியான முன்னாள் பெனாங் பிராந்திய முதலமைச்சரான கோஹ் சூ கூனை அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ராமசாமி தோற்கடித்தார்.
மலேசியாவின் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ராமசாமி இந்திய சீன மக்கள் மலேசியாவில் புறக்கணிக்கப்படுகின்றமையையும் ஊழல்களையும் முன்னிலைப்படுத்தியே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
ராமசாமி ஏற்கனவே ஜெர்மனியிலும் சிங்கப்பூரிலும் ஆசிரியராக தொழிலாற்றினார். 1977 ஆம் ஆண்டு அமரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பீ ஏ பட்டம் பெற்ற அவர்கனேடிய மெக்கில் பல்கலைக்கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்றார்.தமது பி எச் டி நெறியை 1991 ஆம் ஆண்டு மலாயாவில் பெற்றார்