கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்தேகம பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின்போது ஐந்து பெண்கள் உட்பட 15 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தேடுதல் நடவடிக்கை காலை 9.30 மணிவரை இடம்பெற்றதாகவும் இதன்போது ஐந்து பெண்கள் உட்பட 15 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின்போது வீடுகள்,வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என்பன பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் அனேகர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இங்குவந்து தங்கியிருப்பதற்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லையெனவும் தெரிவித்த பொலிஸார் சிலர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.