24-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் அவை எந்ததெந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என்ற தகவல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரியுள்ளது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவம் தொடர்பான சர்வதேச சமூகத்தில் பிழையான எண்ணக்கருவை தோற்றுவிக்க இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவேää இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக தகவல் திரட்டும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கடந்த காலங்களில் பெண்தற்கொலைப் போராளியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு 12 கோடி ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் மனித உரிமைகள் என்ற போர்வையில் அடிக்கடி ஜெனீவா செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்ததாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
|