News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

அதிரடிப்படை வெளியேற்றப்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

24-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றவோ, அங்கு தேர்தலொன்றை நடத்துவதற்கோ அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை அரசாங்கம் வாக்குகளை கொள்ளையடிக்க போகின்றதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
 
பிரிவினைவாதம் தோற்கடிப்பதற்கு முன்னரே அதிகார பகிர்வினை முன்வைத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மாகாண சபையை ஏற்படுத்துவதற்கு முற்சிப்பது அரசாங்கத்தின் முட்டாள் தனமான முடிவாகும். அவ்வாறான நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இது பிரிவினை வாதத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஜே.வி.பி அரசியல் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
 
மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தவில்லை. சர்வ கட்சி ஆலோசனை குழுவின் யோசனைகளின் பிரகாரமும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அமைவாகவும் அரசாங்கம் கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளது.
 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அபாயகரமானது மட்டுமல்லாது பிழையான அரசியல் முடிவாகும் இவ்வாறான முடிவினால் இறுதியில் பிரிவினைவாதிகள் சக்தியடைவதே பெறுபேறாக அமையும். தேசப்பற்றாளர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏமாந்து அரசாங்கம்
 
மாகாண சபையை ஏற்படுத்துமாயின் அதற்கெதிராக மாகாண சபைக்குள்ளேயே பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்காக போராடவேண்டி ஏற்படும். அதனால்தான் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடவுள்ளது. மாகாண சபைக்குள்ளேயே சென்று பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலில் பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் அரசாங்கம் போட்டியிட்டதுடன் மாநகரசபையிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே அரசாங்கம் மாகாண சபையில் போட்டியிடுமாயின் அதிகாரத்திருக்கு வருவதற்காக அதிகளவான சாத்தியகூறுகள் பிரிவினைவாதிகளுக்கே இருக்கின்றன.
 
பயங்கரவாதிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றியது முதல் வன்முறைகளற்ற உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்திமுடிக்கப்பட்டமை வரை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பங்கு அளப்பறியதாகும். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு படையினர் தங்களது உயிர்களை இழந்துள்ளரே தவிர அமைச்சர் பிரதியமைச்சர்கள் இழக்கவில்லை.
 
ஜே.வி.பி நீதிமன்றம் சென்றதன் மூலமாகவே ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் 1987 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்கப்பட்டது. அதற்கு பின்னரே கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது இவ்விரண்டுமே மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் செயற்பாட்டின் மூலமாக ஏற்படுத்தப்பட்டதல்ல,ஜே.வி.பியின் செயற்பாட்டினாலேயே இவை கைகூடின. அன்று வடகிழக்கு பிரிக்கப்படாமல் இருந்திருக்குமானால் பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கை மீட்டு அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் முன்னெடுத்திருக்க முடியாது.
 
நடைபெற்ற மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியிடாமையினால் அங்கு போட்டி ஏற்படவில்லை,அரசாங்கமும் பிள்ளையான் குழுவும் இணைந்து முன்னணி அமைத்ததன் மூலமாக அத்தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைந்திருந்தது, வெளிப்படையாக ஆயுதம் பயன்படுத்தப்படாவிடினும் பிள்ளையான் குழு ஆயுத குழுவாகவே தேர்தலில் போட்டியிட்டது. அதனால் தான் ஜே.வி.பி அத்தேர்தலில் போட்டியிடவில்லை.
 
மாகாண சபை தேர்தலிலுள் பிள்ளையான் குழுவை இணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்நிலையில் கிழக்கிலிருந்து விசேட அதிரப்படையினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலமாக அரசாங்கம் மாகாண சபைதேர்தலில் அரசாங்கம் வாக்குகளை கொள்ளையடிக்க போகின்றதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
 
பிள்ளையான் குழுவின் அழுத்தங்கள் காரணமாகவே விசேட அதிரடிப்படையினர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற தகவல்கள் உண்மையாயின் கிழக்கிலிருந்து அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை பாரதூரமானதாகும்.
 
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை நிறுவõமல் இவ்வாறானதொரு தேர்தலுக்கு செல்வதன் மூலமாக அரசாங்கம் ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறுகின்றது. என்பது புலனாகின்றது. அரசாங்கம் கிழக்கில் நீதியான தேர்தலொன்றை நடத்தவேண்டுமாயின் சட்டரீதியற்ற நிலையில் ஆயுதங்களை வைத்திருப்போரிடம் ஆயுதங்களை களைவதுடன் புலிகளிடமிருந்த அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்குமாயின் அவர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பை வழங்கவேண்டும்.
 
 
 
 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions