மாந்தை மேற்கு மற்றும் அடம்பன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை (21.03.2008) அதிகாலை முதல் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் உக்கிர இடம்பெற்றது. இத்தனை தொடர்ந்து உயிரிழந்த 10 புலிகளின் சடலங்களை படையினர் நேற்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இச்சடலங்களில் துப்பாக்கி சூடு அடையாள பல காணப்படது. இச்சடலங்களில் சைனட் குப்பிகள், ஆயுத அங்கிகள் என்பன காணப்பட்டது. 06 பெண் புலிகளுடைய சடலங்களும் 04 ஆண் புலிகளுடைய சடலங்களுமே மேற்படி மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இதில் 08 போராளிகளின் நம்பர் தகடுகள் காணப்பட்டது .அவை த.வி.பு.ய 0380 த.வி.பு.ய 1168,த.வி.பு.ய5026, த.வி.பு.ய5016,த.வி.பு.ய-5143,த.வி.பு.ய 1666,த.வி.பு.ய 00449 த.வி.பு.ய -0.1996 ஆகிய நம்பர் தகடுகள் சடலங்களில் காணப்பட்டது.
இச்சசடலங்களை நேற்று மாலை 5.05 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் டி.ஜே பிரபாகரன் வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சடலங்களை பின்னர் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.