தமிழீழத்தேசியத்தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி தாயக விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என நாயாற்றுக் கடலில் நேற்றுமுன்தினம் டோறாவைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலின்போது லெப்.கேணல் அன்புமாறன், மேஜர் ரஞ்சினி, மேஜர் கனிநிலா ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இந்த வெற்றிகரமான தாக்குதலில் ஈடுபடமுன்னர் தங்கள் கருத்துக்களை தமிழீழத்தேசியத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்தனர்.
தேசியத்தலைவரின் கரத்தைப்பலப்படுத்தி அவரின் காலத்தில் விடுதலையை வென்றெடுக்க எல்லோரும் உழைக்கவேண்டும் என்றும் கடற்கரும்புலிகள் இதில் தெரிவித்துள்ளனர்.
கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி தனது கருத்தில் எமது அண்ணாவிற்கு தோளோடு தோளாக நின்று எவ்வளவுக்கு தங்களால் இயன்றளவு செய்யமுடியுமோ
அவ்வளவுக்கு செய்து அண்ணாவின் காலப்பகுதிக்குள் தமிழீழத்தைப் பெற்றெடுக்கவேண்டும் என்றார்.
லெப்.கேணல் அன்புமாறன் தனது கருத்தில் எனது அன்பான மக்களுக்கு நீங்கள் இதைப்பார்க்கும் நேரம் நான்உங்களைவிட்டு நீண்டதூரம் வந்திருப்பன். அதாவது நான் வீரச்சாவடைந்திருப்பேன்.
மக்களுக்கு சொல்லிவிட்டுப் போகவிரும்புவது என்னவென்றால் கரும்புலிகளால் தகர்க்க ஏலாது என்று சொல்லி எதுவுமேயில்லை. கரும்புலிகள் தான் எங்கள் போராட்டப்பாதையில் தடையாகஇருந்தவற்றையெல்லாம் தடைகளை நீக்கி தடைக்கற்களை உடைத்தெறிந்து காட்டியுள்ளனர்.
எல்லாஇடமும் அப்படித்தான் செய்கிறார்கள் 22.10.2007 நடந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டாலும் உங்களுக்குத் தெரியும் அநுராதபுரத்தாக்குதலின் போது எங்கள் போராளிகள் செய்த
வீரத்தீரத்தாக்குதல்கள் உங்களுக்கு விளங்கி இருக்கும். அதுபோல் நீங்களும் வந்து தலைவரின் காலத்தில் ஒன்றிணைந்து தலைவரின் கரத்தைப் பலப்படுத்தி இந்த நாட்டிற்கு ஒரு முடிவைப்பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதைச்சொல்ல விரும்புகிறேன். இதோடு நான் விடைபெற்றுக்கொள்கின்றேன் என்றார்.