இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
புத்தகாயாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று வாகனமொன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்த 12 இலங்கையர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.