News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

திடீர்ப் பொதுத் தேர்தலை நாடுமா அரசு?

24-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இராணுவத் தந்திரோபாயத் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை எதிர்பார்த்த காலவரையறைக்குள் தராதமையால் வேறு வழிவகைகளை நாடவேண்டிய சிக்கல் கொழும்பு அரசுத் தலைமைக்கு ஏற்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் விவரிக்கின்றன.
பல்வேறு உதிரிக் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவை தனது நிறைவேற்று அதிகாரப் பலம் என்ற பூச்சாண்டியைக் காட்டி வரித்துக் கொண்டிருக்கும் மஹிந்த அரசு, அந்த ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதை யுத்த களத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கிடைக்கக்கூடிய வெற்றி உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தது.ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அந்த வெற்றியோ கானல் நீர்போலத் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது எட்டாக் கனியாக.அதைத் தட்டிப்பறிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற யதார்த்தம் "ராஜபக்ஷ அண்ட் பிறதர்ஸ்' கம்பனிக்குப் புரியத் தொடங்கிவிட்டதால் ஆட்சியைக் கொண்டிழுக்க அல்லது நீடிக்க புதிய மாற்றுவழி குறித்து யோசிக்கின்றது மஹிந்தரின் தலைமை.கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது கடைசிக் கட்டத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியதன் மூலம் மஹிந்தரின் அரசைக் காப்பாற்றியது ஜே.வி.பி.ஆனால் அத்தகைய உதவி இனிமேலும் ஜே.வி.பியிடம் இருந்து கிட்டுவது துர்லபமே என்று உணர்ந்துள்ள அரசுத் தலைமை அதனால் மாற்றுவழி தேட முயல்கின்றது.
 
பொருட்களின் விலைவாசியும் எக்கச்சக்கமாக எகிறி, இராணுவ யுத்தக் களமுனையில் எதிர்பார்த்த வெற்றிகளை நாட்டுக்கு இந்த அரசு பெற்றுக்கொடுக்கவும் தவறியுள்ள இந்தச் சூழலில், இனிமேலும் இந்த அரசுக்கு முண்டு கொடுத்துத் தனது மூக்கை உடைத்துக்கொள்ள ஜே.வி.பி. அப்படி ஒன்றும் மிக முட்டாள் தனமான கட்சியல்ல.
எனவே, இன்னொரு தடவை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசு தப்பிப்பிழைக்க ஜே.வி.பி. உதவும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமுமில்லை; பலனுமில்லை.ஆகவே, அத்தகைய வாக்கெடுப்பு நெருக்கடி ஒன்று நாடாளுமன்றுக்கு வருவதற்கு முன்னரே தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசிக்கும் மஹிந்தரின் அரசுத் தலைமை, புதிய பொதுத்தேர்தல் ஒன்றை நாடுவதே அதற்கு ஒரே வழி எனச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது.
நடந்து முடிந்த மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலையும், நடக்கப்போகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும், மேற்படி பொதுத் தேர்தலுக்கான கள நிலைவரத்தை உரசிப் பார்க்கும் அமிலச் சோதனையாகக் கருதிச் செயற்படுகின்றது அரசு.திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றை இந்த வருட மத்தியில் பெரும்பாலும் ஜூலை, ஓகஸ்ட் மாதத்தில் அரசு நடத்தத் திட்டமிடுகின்றது என்ற தகவலை ஜே.வி.பியின் முன்னணிப் பிரமுகரான அனுரகுமார திஸநாயக்கவும் வெளியிட்டிருக்கின்றார்.
 
அப்படி ஒரு பொதுத் தேர்தலை, தற்போது பல்வேறு கட்சிகளிலிருந்தும் பிய்த்து உதறிக் கொண்டு வந்து அமைச்சர் பதவிகளுக்காகத் தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உதிரிகளை வைத்துக்கொண்டு சந்திக்க விழைகிறது அரசு.
அம்முயற்சியில் அரசு எதிர்பார்த்த வெற்றியை ஈட்டுமா அல்லது யுத்த முனையில் "இலவு காத்த கிளியாக'ப் பார்த்திருப்பது போன்ற நிலைமையைத்தான் அதுவும் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், அமைச்சுப் பதவிகளுக்காக அரசுத் தரப்போடு போய் ஒட்டிக்கொண்ட உதிரிகளுக்கு அத்தகைய திடீர்ப் பொதுத் தேர்தல், அவர்களின் அரசியல் வாழ்வுக்கான மரணப் பொறியாகவே அமையும் என்பதை மட்டும் இப்போதே அறுதியிட்டுக் கூறிவிடலாம்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிலிருந்து அதிருப்திக்குழு என்ற பெயரில் அவ்வப்போது அரசுத் தரப்புக்கு அமைச்சர் பதவிகளுக்காக "பல்டி' அடித்து, அணிமாறி, உதிரிகளாகத் தம்மை அரசுடன் இணைத்துக் கொண்டவர்களுக்கு அரசின் உத்தேச திடீர் பொதுத்தேர்தல் திட்டம் இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது.அப்படி ஒரு திடீர்ப் பொதுத்தேர்தல் நடக்குமானால், இப்படி "ஒரிஜினல் ' கட்சியிலிருந்து "பல்டி' அடித்த எவருமே மீண்டும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாகத் தேறமாட்டார்கள் என்பது அவர்களுக்கே நன்கு தெரியும். ஆனால், இவ்வாறு தமது அரசியல் எதிர்காலத்தையே அரசியல் சூதாட்டத்தில் பணயம் வைத்து, அரசுத் தலைமைக்கு முண்டுகொடுக்க முன்வந்த இந்தக் "குத்துக்கரணங்களை 'ஒரேயடியாகக் கைவிட்டு, தனது அரசைத் தக்கவைக்கும் முயற்சிக்காக இத்தகைய எந்த வாய்ப்பான நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசுத் தலைமை பின்நிற்காது என்பதும் தெளிவு.
அத்தகைய முயற்சியாக திடீர்ப் பொதுத் தேர்தலை மஹிந்தரின் தலைமை அறிவிக்கும்போதுதான், அதுவரை அணிமாறி, மஹிந்தரின் அரசுக்கு முண்டு கொடுத்துத் தவறிழைத்தோர், தமது பிழையை உணர்ந்து கொள்ள முற்படுவர். ஆனால் அத்தவறுக்கு பிராயச்சித்தம் செய்யக்கூட அப்போது அவர்களுக்குக் காலம் கடந்து விட்டிருக்கும் என்பதுதான் யதார்த்த நிலைமையாக இருக்கும்.
 Other Articles
•  05 Jul 2008 09:54:00 தமிழ் பக்தர்கள் கதிர்காமம் உற்சவத்தில் குறைவு
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
•  05 Jul 2008 01:51:00 அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் எப்படி ஊடகங்களுக்கு கிடைக்கின்றன?
•  05 Jul 2008 01:48:00 வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை கடத்தல்
•  05 Jul 2008 01:43:00 எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை
•  05 Jul 2008 01:40:00 பாகிஸ்தான் அதிபர், பிரதமருடன் ரோகித போகல்லாகம சந்திப்பு
•  05 Jul 2008 00:53:00 அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் புலிகள் ரூபா 1 கோடி ஊதியம்
•  04 Jul 2008 16:14:00 வவுனியாவில் நான்குபேர் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்
•  04 Jul 2008 15:41:00 வவுனியாவில் முதியவர் சுட்டுப்படுகொலை
•  04 Jul 2008 15:22:00 கடன் வாங்கி கல்யாணம் செய்வது போன்று அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது - ரவி கருணாநாயக்க
•  04 Jul 2008 15:17:00 விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – கருணா
•  04 Jul 2008 15:12:00 முப்படைகளின் தலைமைக்குத் தகுதியானவர்
•  04 Jul 2008 15:00:00 தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் அசமந்த போக்கே விடுதி கட்டுமானம் தாமதத்திற்கு காரணம்
•  04 Jul 2008 14:45:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்
•  04 Jul 2008 12:54:00 புலிகள் புதிய வானொலிச் சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்
•  04 Jul 2008 12:51:00 பொலிஸாரிடம் நடிகை அனார்கலி முறைப்பாடு
•  04 Jul 2008 12:48:00 அரசாங்கம் திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லக்பிம
•  04 Jul 2008 12:47:00 ஓமந்தை சோதனைச்சாவடி மூன்றாவது நாளாக பூட்டு
•  04 Jul 2008 12:45:00 மல்லாவி துணுக்காய் பிரதேசத்து மக்கள் இடம்பெயர்வு
•  04 Jul 2008 12:43:00 மின்சார வினியோகம் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வருகின்றது
•  04 Jul 2008 12:41:00 ஜனாதிபதி அறிவித்தமை விநோதமானது
•  04 Jul 2008 12:39:00 தேர்தல்கள் ஆகஸ்ட் 23ம் திகதி
•  04 Jul 2008 12:38:00 மக்கள் இருக்கும் இடம் நோக்கிச் காவல்துறையினர் செல்ல வேண்டும்
•  04 Jul 2008 12:35:00 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் உதவி அரசாங்க அதிபர் கோரிக்கை
•  04 Jul 2008 12:33:00 40 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்
•  04 Jul 2008 12:31:00 மக்களின் பிரதான கடமையாக படைவீரர்களக்கு ஆதரவளிப்பதே
•  04 Jul 2008 12:28:00 தண்டனை கருணாவிற்கு வழங்க வேண்டும்
•  04 Jul 2008 12:26:00 7 விடுதலைப் புலி குழுக்கள் பிரான்சில் இயங்கி வருவதாக திவியின
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions