மன்னார் பஸ்நிலையத்தில் காலை 10.30 மணிமுதல் 12.00 மணிவரை பொலிஸார் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் அனைவரும் பாரிய சோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன் போது 4 பேர் தடுத்துவைக்கப்பட்டு , அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டனர்.இதன் காரணமாக மக்களின் நடமாட்டம் சற்று குறைவாக காணப்பட்டதாகவும் .
அங்கும் சென்ற வாகனங்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட.பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.