இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு வேண்டிய சமாதான முனைப்புகளில் பங்குகொள்ள தென் ஆபிரிக்க முன்வந்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கென உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பு எதிர்வரும் சில நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ளது.
லண்டனில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா,அவுஸ்திரேலியா,அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என தென் ஆபிரிக்க அமைச்சர் ரோய் பட்யாட் இகுப்தா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கி வரும் நாடுகளில் முதல் இடத்தை தென் ஆபிரிக்கா வகிப்பதாக பல ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக லங்கா தீப சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது