ஸ்ரீலங்காவில் கடந்த இரண்டரை மாத காலப்பகுதியில் லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 13 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள், இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரி முதலியோர் கைதானவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காவல்துறை திணைக்களத்திற்கு புதிதாக 40 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்வது தொடர்பான விலை மனுக்கோரலை அனுமதிப்பதற்கு 40 லட்ச ரூபா லஞ்சமாக வழங்கப்பட வேண்டும் என உயர் காவல்துறை அதிகாரியொருவர் கோரியுள்ளார்.
தனக்கு நெருங்கிய காவலதுறை அதிகாரியொருவரின் ஊடாக குறித்த நிறுவனத்திடம் இந்த லஞ்சத்தை சிரேஷ்ட அதிகாரி கோரியுள்ளதாகத் தெரியவருகிறது.எனினும், இந்த பணத்தை வழங்க முடியாது என குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே குறித்த செய்தி வெளியாகியுள்ளது