இந்தியாவை எதிரியாக நோக்கும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு தொடர்ந்தும் நீடிப்பதாக இடதுசாரி கட்சிகளின் இளைஞர் அமைப்பு அந்தக் கட்சியைக் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நடைமுறைபப்டுத்துவதற்கு ஜே வி பி எப்போதும் இடையூறாக இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இளைஞர் சமூக அமைப்பு சமசமாஜ இளைஞர் காங்கிரஸ் ஜனநாயக இடதுசாரி இளைஞர் அமைப்பு இலங்கை மக்கள் இளைஞர் அமைப்பு மற்றும் தேச விடுதலை மக்கள் இளைஞர் அமைப்பு ஆகிய 5 இடதுசாரிகள் இணைந்த இளைஞர் அமைப்பே இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்து ஜே.வி.பியின் அரசியல் வரலாற்றில் அது இந்தியா மீது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தது. பின்னர் அது இந்திய வம்சாவளி தமிழர்களிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு மாறியது. இதனையே தற்பொழுதும் ஜே வி பியினர் பின்பற்றி வருவதாக இடதுசாரி இளைஞர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லை விஸ்தரிப்பு கொள்கைக்கு தாம் எதிரானவர்கள் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. எனினும் இந்த மக்களுக்கு தாம் எதிரானவர்கள் அல்லர் என ஜே வி பி தெரிவித்துள்ளது.