ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
ஸ்ரீலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவர் அமரிக்க வாசிங்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்காத்தூதரகத்திற்கு அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். இவர் மனித உரிமைகள் மற்றும் அரசியல் ரீதியான விடயங்கள் தொடர்பாக அமரிக்க ராஜாங்க திணைக்களத்துடன் தொடர்புகளை பேணுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய அமரிக்காவுக்கான ஸ்ரீலங்காத்;தூதர் பேனாட் குணதிலக்க விரைவில் தமது பதவியில் இருந்து விலகவுள்ளார். இதனையடுத்து இவருக்கு பதிலாக லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமரிக்க தூதரக துணைமையத்தில் பணியாற்றும் ஜாலிய விக்கரமசூரிய அமரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார். இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினராவார்.