25-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இதர தேர்தல்களுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றிபெறும் நோக்கில் கட்சியைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி "மக்கள் சக்தி படை" வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தேசிய வேலைத் திட்டத்தின் மூலமாக கட்சிக்காக நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் கிராமத் தலைவர்கள் உருவாக்கப்படவுள்ளனர் என்று ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மக்கள் சக்தி படை தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம், எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நாளை ஆரம்பித்துவைக்கப்படும் என்றும் அவர் கூறினார். எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; எதிர்வரும் 700 நாட்களுக்குள் பொதுத்தேர்தல், ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட இதர தேர்தல்கள் கட்டாயமாக நடத்தப்படவேண்டும். இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிரான ஐக்கிய தேசியக்கட்சியின் குரலை கிராமங்களுக்குள் கொண்டு செல்வதற்காக மக்கள் சக்தி படை தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலமாகப் பத்து வீடுகளுக்கு ஒரு தலைவர் என்றவகையில் நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் கிராம தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள். ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஆகிய கட்சிகளுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடியளவு நிலையான வாக்கு வங்கி இருக்கின்றது. எனினும் அதன் மூலமாக எக்கட்சியினராலும் தனியாக வெற்றிபெற முடியாது. மக்கள் சக்தி படை தேசிய வேலைத்திட்டத்தின் மூலமாக உருவாக்கப்படுகின்ற கிராமத் தலைவர்கள் ஜே.வி.பிக்கு கிடைக்கின்ற வாக்குகளை விடவும் அதிகமானதாகும். இத்தலைவர்களைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை விடவும் 10 இலட்ச வாக்குகளை மேலதிகமாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தூரநோக்குடன் எதிர்காலத்தேர்தலில் தோல்வியைத் தழுவிக்கொள்ளாத வகையில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் மூலமாக அரசாங்கத்தைப் பொதுத்தேர்தலொன்றிற்குத் தள்ளுவதற்கான அழுத்தங்களும் கொடுக்கப்படும். தேசிய,மாகாண,மாவட்ட,தேர்தல் தொகுதிவாரியாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் மூலமாக அரசாங்கத்தின் எந்தவொரு சவால்களுக்கும் முகம்கொடுக்கும் வகையில் மக்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
|