கொழும்பு பேலியகொடயில் ரயில் வீதிக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள 325 மீட்டர் நீளமான மேம்பாலம் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.
இப்பாலத்தை 61 நாட்களில் நிர்மாணித்தன் மூலம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனை இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசாங்கமே நிகழ்த்தியிருந்தது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்தில் சுமார் 300 மீட்டர் நீளமான மேம்பாலத்தை அந்நாட்டு அரசாங்கம் 66 நாட்களில் நிர்மாணித்தது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் களனி ரயில் கடவையை ஊடறுத்துச் செல்லும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் ஐக்கிய இராச்சியத்தின் 2000 மில்லியன் ரூபாய் உதவியில் அமைக்கப்பட்டுள்ளது.
களனி ரயில் கடவையினூடாக ஒரு நாளைக்கு சுமார் 75 ஆயிரம் வாகனங்கள் பிரயாணம் செய்கின்றன. ரயில் வண்டிகள் செல்வதற்காக 160 தடவைகள் இக்கடவை மூடப்படுகின்றது. இந்த மேம்பாலம் அமக்கப்படுவதன் மூலம் அந்த வீதியில் தினமும் ஏற்படும் வாகன நெரிசல்களை வெகுவாகக் குறைந்து விடும் நோக்கில் இம்மேம்பாலம் அமைக்கப்ப்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.