நாகர்கோயில் முன்னரங்க நிலையில் நேற்று முன்தினம் காலை இராணுவச் சிப்பாய் ஒருவர் சக சிப்பாயினால் சுட்டுக்கொல்லப்பட்டார்
எனக் கூறப்படுகின்றது. ஆறாவது முன்னேறும் படையணியில் பணியாற்றும் தொடங்கொட, தேவாலய வீதியைச் சேர்ந்த கே.பி. சுதர்சன (வயது 25) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவரைச் சுட்டுக்கொன்றவர் என்ற சந்தேகத்தில் ஏ.எம்.ஆர். அஜித் அதிகாரி என்பவர் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சாவகச்சேரி நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுப் பூர்வாங்க விசாரணைகளை நடத்தினார்.
உயிரிழந்த சிப்பாயின் சடலம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் நேற்று வைக்கப்பட்டிருந்தது