திருகோணமலை மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவ நடவடிக்கை காரணமாக உள்ளுரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வதியும் பொதுமக்களை 15 பேரூந்தகளில் அவர்களது சொந்த கிராமங்களில் குடியமர்த்தவுள்ளதாக தெரியவருகறது.
132 குடும்பத்தை சேர்ந்த 459 உறுப்பினர்கள் மூதூர் பாலைகுடியிருப்பு பகுதியில் அவர்களது சொந்த கிராமங்களில் குடியமர்த்தவுள்ளதாகவும் இவர்கள் தற்போது செங்கலடி, வாழைச்சேனை, மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகியபகுதிகளில் நலன்புரிநிலையங்களில் வதிந்து வருவதாகவும் அறியமுடிகிறது.
இவர்கள் பருவமழைகாரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அதிகாரிகள் இவர்களை இருவாரங்களுக்கு முன்னதாகவே சொந்த இடங்களுக்கு குடியமர்த்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
பெரும் எண்ணிக்கையி;ல் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெயர்த பொதுமக்கள் 19 நலன்புரி நிலையங்களிலும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை சம்பூர் மற்றும் மூதூர் பகுதி மக்களை அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களது சொந்த கிராமங்களுக்கு மீள குடியமர்த்தப்படுவார்கள் எனத்தெரியவருகிறது.