முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் ஏற்கனவே அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும் இவர்கள் நீதிமன்றில் ஆஜராகியிராத நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க இவர்களுக்கான அழைப்பாணையை மீண்டும் பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு காவல்துறையினர் நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.