வெள்ளவத்தையில் காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியான எட்வட் பிரேமானந்த் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை கடற்கரையோர வீதியில் வைத்து இவர் கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. முச்சக்கர வண்டி சாரதி நேற்று நள்ளிரவு தெஹிவளை பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவரது உடம்பில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.