கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக துணை இராணுவக்குழுவின் ஆயுததாரி பிள்ளையானை நியமிக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் பெயரில் பிள்ளையானை போட்டியிடச் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக, பிள்ளையான் குழுவில் ஜவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பேச்சுவார்த்தைக் குழுவில் பிள்ளையான், அசாத் மெளலானா, கிருஷ்ண நந்தராஜா, ஜெயம் மற்றும் பாரதி ஆகியோரே இந்த பேச்சுக்குழுவில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.