கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 330,950 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 154,761பேரும்,பட்டிருப்பில் 81730பேரும் ,கல்குடா தொகுதியில் 94359பேருமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 330,950பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 362 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.