News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

தமிழகக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்

26-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சியினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத வரை மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த நாளேட்டில் இன்று புதன்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
இலங்கையில் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் திரும்பவும் கூறியிருக்கிறது. ஏற்கனவே, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இச்செய்தி கடந்த வாரம் இரு மார்க்கங்களின் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இலங்கை நெருக்கடியை இந்தியா கையாளுகின்ற முறை குறித்து தனக்கிருக்கும் கவலையை வெளிக்காட்டி தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார். இதற்கு கடந்த வாரம் பதிலளித்திருக்கும் பிரதமர் கலாநிதி சிங், ஐக்கிய இலங்கை வரையறைக்குள் சகல சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இணக்கத் தீர்வொன்றை பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் காண்பதே இன நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உகந்த மார்க்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, இந்திய பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்திருக்கும் வருடாந்த அறிக்கையில் 'இலங்கை இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு கிடையாது என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும். சகல சமூகங்களினதும் குறிப்பாக சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை ஐக்கிய இலங்கை வரையறைக்குள் தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் மற்றும் அரசியலமைப்பு வழிவகைகளே அவசியமாகும்' என்று குறிப்பிட்டிருக்கிறது.
 
இராணுவத் தீர்வு சாத்தியமானதல்ல என்று சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் வலியுறுத்துவதைப் போன்றே இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தச் செய்தி எத்தரப்பினரை இலக்காகக் கொண்டு சொல்லப்படுகிறதோ அத்தரப்பினர் அதை பொருட்படுத்துவதற்கான எந்தவித அறிகுறியையும் காணக்கூடியதாக இல்லை. மாறாக, இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வைக் கண்டுவிடுவது சாத்தியம் என்ற நம்பிக்கையை சிங்கள மக்களுக்கு ஊட்டி, முற்றுமுழுதான போருக்கே தென்னிலங்கை அரசியல் அரங்கு தயார்படுத்தப்பட்டிருப்பதைக் காண்டிக்கூடியதாக இருக்கிறது. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று திரும்பத் திரும்பக் கூறகின்ற சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளினதும் இந்தியாவினதும் அணுகுமுறைகள் மறுபுறத்தில், இலங்கை அரசாங்கம் இராணுவத் தீர்வில் கூடுதல் நாட்டம் காட்டுவதற்கே ஊக்கமளிப்பவையாக அமைந்திருக்கின்றன.
 
இந்தியாவைப் பொறுத்த வரை அதன் கடந்த பல வருடகால அணுகுமுறைகள் தென்னிலங்கையில் இருக்கின்ற பேரினவாத சக்திகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலையைத் தோற்றுவிக்க உதவினவே தவிர, அரசியல் தீர்வை வலியுறுத்தி நிற்கும் சமாதான விரும்பிச் சக்திகளை வலுப்படுத்தவில்லை என்பதை இந்திய அவதானிகள் புரிந்து கொள்வது அவசியம். சுதந்திர இலங்கையின் சரித்திரத்திலே முன்னென்றுமில்லாத வகையிலான கடும்போக்கு சிங்கள மேலாதிக்க உணர்வு கொண்ட ஒரு அரசாங்கம் தற்போது பதவியில் இருக்கிறது. அந்த அரசாங்கம் சிறுபான்மையினங்களின் நியாயூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத சக்திகளை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றும் அரசியல் தீர்வே அவசியம் என்றும் போதனை செய்து விடுக்கப்படும் அறிக்கைகள் மூலமாக இந்தியாவினாலோ அல்லது வேறு எந்தவொரு வல்லாதிக்க நாட்டினாலோ இலங்கையின் இன்றைய துரதிர்ஷ்டவசமான நிகழ்வுப் போக்குகளில் மாற்றமெதையும் செய்ய முடியாது என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.
 
இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த 1980 களின் இறுதிப்பகுதிக்குப் பின்னரான காலக்கட்டத்தில் இடம்பெற்ற மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களையடுத்து இலங்கைத் தமிழர் தரப்பிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருந்த கசப்பு நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து புதியதொரு அத்தியாயத்தைத் திறப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்பதே தமிழ் மக்களின் ஏக்கமாக இருக்கிறது. போரை முழு மூச்சில் முன்னெடுக்க வேண்டுமென்று குரலெழுப்பும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு உற்றாகத்தைத் தரக்கூடியதாக அமைந்த அண்மைய பல வருடகால இந்திய அணுகுமுறை தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத வரை மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை. உண்மையில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடி தொடர்பிலான அதன் தற்போதைய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றத்தைச் செய்யாவிட்டால் இலங்கையில் போரை நிறுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான பங்களிப்பையும் செய்வதற்கில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions